Tuesday, August 29, 2006

An Angel

சாலையை கடக்க முயன்ற
கணப்பொழுதில் அது நிகழ்ந்தது,
முதுமையில் தளர்ந்த அறிவு
சீறிய வாகன வேகத்தை கணக்கிட
தவறிய ஒரு நொடியில், தவறை உணர்ந்த போது சாலையில் கிடந்தேன்
நடைபாதை கம்பியை பற்றி எழ முயல
விழியில் வழிந்த குருதி வழியை மறைத்தது
கால்கள் தள்ளாட கண்கள் இருண்டது
மயங்கி சரிந்த போது இரு கரங்கள்
தாங்கியதை உணர்ந்தேன்
மருத்துமனையில் புடவையில் கணகளை துடைத்து கொண்ட மனைவி கைகாட்டி சொன்னாள்.
அந்த பொண்ணுக்குதான் நீங்க நன்றி சொல்லனும்,
சிரித்த அந்த பெண் கல்லூரிக்கு நேரமாவதாக கூறி கிளம்பினாள்.
மீண்டும் ஒரு நாள் சந்தித்து நன்றி கூறி திரும்புபொழுதுதான் கவனித்தேன்,
அவளுக்கு சிறகுகள் இருந்ததை.